தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்தியலம் அண்ணாநகர் பகுதியில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு, பரத், பாஸ்கரன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி பாபு குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.