மகாராஷ்டிர மாநிலமான புனேவில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்ததை யாருக்கும் தெரியாமல் அப்பெண்ணின் கொழுந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து தனது அண்ணியை அணுகிய 25 வயது கொழுந்தன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த வந்த நிலையில் வேறு வழியில்லாமல் இது தொடர்பாக தனது கணவரிடம் இளம்பெண் கூறியுள்ளார். மேலும் கொழுந்தனார் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார். அந்த புகாரின்படி தலைமறைவான கொழுந்தனாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.