Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. பாறையில் அடிபட்டு பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கந்தசாமி-ஜோதி தம்பதியினர். இவர்களின்  மகன் முத்து என்ற மோகன்ராஜ் (24). பட்டதாரி வாலிபரான இவர் துறையூரிலுள்ள ஒரு பேக்கரில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று மாலை மோகன்ராஜ் சகதொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். அங்கு புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியிலுள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். அண்மையில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்தது.

இந்நிலையில் அபாயம் என வாசகம் எழுதப்பட்ட பாறை மேல் ஏறி, மோகன்ராஜ் குதித்ததாக தெரிகிறது. அதன்பின் மோகன்ராஜ் மேலே வரவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைந்த சகதொழிலாளர்கள் அவரை தேடினர். எனினும் மோகன்ராஜை கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தனர். அதன்பின் வனத்துறையினர் தேடியபோது அருவியில் நீரோட்டம் அதிக இருந்த பகுதியில் மோகன்ராஜ் சடலமாக கிடந்தார். அதாவது மோகன்ராஜ் அருவியில் குதித்தபோது தண்ணீரின் அடியில் இருந்த பாறையில் தலை மோதியதில் படுகாயடைந்து இறந்தது தெரியவந்தது.

இதேபோன்று புள்ளம்பாடி அருகேயுள்ள கோவண்டாகுறிச்சி வடுகர்பேட்டை கிராமத்தில் வசித்து  வந்தவர் ஜான் பிரிட்டோ (28). இவர் நேற்றுமதியம் அங்கு உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் குளிக்க சென்றார். இந்நிலையில் குளித்துக்கொண்டு இருக்கும்போது, ஜான் பிரிட்டோவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வாய்க்காலில் மூழ்கினார். இது தொடர்பாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜான் பிரிட்டோ பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |