Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவன்… ஏரியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து அவர்கள் குளித்து கொண்டிருக்கும்போது ஆழம் நிறைந்த பகுதிக்கு சென்று குளித்து கொண்டிருந்த பிரதீஸ் எதிர்பாரதவிதமாக தண்ணீர்ல் மூழ்கியுள்ளார். இதனைபார்த்த சிறுவனின் நண்பர்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து பிரதீசை காப்பாற்ற முடியவில்லை. எனவே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியில் உயிரிழந்து கிடந்த பிரதீசை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |