Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்றவருக்கு நடந்த சோகம்… எங்கு தேடியும் கிடைக்கவில்லை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

கன்னியாகுமரியில் ஆற்றில் குளிக்க சென்றவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெருமாள் புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் மாணிக்கம்(63) மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். மாணிக்கம் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் தொழிலில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாள் புரத்தில் உள்ள பிள்ளையார்குளத்தில் குளிக்க செல்வதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் பிள்ளையார்குளத்தின் கரையோரம் மாணிக்கத்தின் உடல் மிதந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மாணிக்கத்தின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |