Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளத்தை சுற்றி வரும் தெப்பம்…. விடிய விடிய நடக்கும் திருவிழா…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….

பிரசித்தி பெற்ற கோவிலில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக தியாகராஜர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதுடன், கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஒரு முறை குளத்தை தெப்பம் சுற்றிவர 3 மணிநேரம் ஆகும் நிலையில் தினமும் 3 முறை குளத்தை தெப்பம் வலம் வர வேண்டும். இந்த நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுவதால் இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர்.

Categories

Tech |