Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குளச்சலில் போதை ஒழிப்பு பேரணி”…. இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்….!!!!!

குளச்சலில் போதை ஒழிப்பு குறித்து போலீஸ் சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமாரி காவல்துறை சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக குளைச்சல் சப் டிவிஷன் சார்பாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராசர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

இதனை துணை போலிஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த பேரணியானது உடையார்விளை, லட்சுமிபுரம், செட்டியார் மடம், திங்கள் நகர் வழியாக இரணியல் காவல் நிலையம் சென்றடைந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |