Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சின்ன பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25-ஆம் தேதி தனது மகன் வேதமூர்த்தி(30), பேரன் கீர்த்திஸ்(4) ஆகியோருடன் குலதெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அரியானூர் பகுதியில் சென்ற போது வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன பொண்ணு பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |