Categories
ஆன்மிகம் இந்து

குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களை தேடி வரும்…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது.

குலதெய்வம் எது என்று தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குலதெய்வம் பற்றி தெரியாமல் இந்த பூஜை, வழிபாடு, பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் அதில் பலனில்லை. இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து உங்களின் குலதெய்வத்தை காட்டும்படி கால பைரவரிடம் மனமுருகி வேண்ட வேண்டும்.

அதே சமயம் எந்த கோரிக்கைகளையும் முன் வைக்க கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தால் மிகவும் நல்லது. மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் செய்யும்போது காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி கட்டாயம் அறிய வைப்பார்.

இப்படி, குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபட, அகத்திய மாமுனிவர் வழிபாடு செய்த வனதுர்க்கையை பின்பற்றலாம். கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனதுர்க்கை கோயில் நிலைகொண்டுள்ளது.

சூரியனின் கதிர்கள் துர்க்கையம்மனின் மீது படுவதால், இந்த துர்க்கைக்கு ‘ஆகாச துர்க்கை’ என்றும் பெயர் உள்ளது. இந்த கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பாக அமையும். எழுமிச்சை விளக்கேற்றி வழிபட குலதெய்வத்தின் சக்தி நம்மை சூழும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் பெற்று சஞ்சலங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Categories

Tech |