Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… இரவு நேரம் குளிப்பதற்கு அனுமதி… கலெக்டர் அறிவிப்பு…!!!

குற்றாலம் அருவியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நாளை மறுநாள் திங்கட்கிழமை(25-ம் தேதி) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |