கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது வன்மம் காட்டுகிறார்கள்.தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்திற்கு கீழே போகும் அவர்களின் எண்ணம் என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.