தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தீவிர குற்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட, அதாவது தேர்தலில் ஈடுபடுவது, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது போன்றவற்றிற்கெல்லாம் தடை கோரி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இதே விஷயத்தை அவர் வாதங்களாகவும் முன் வைத்தார்.அதன்பின் நீதிபதிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய தலைமை இந்திய தேர்தல் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட துறை அமைச்சகம் மற்றும் சட்ட ஆணையம் ஆகியவை பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த வழக்கு விசாரணை என்பது எந்த தேதி என்று சொல்லப்படவில்லை.. எதிர் மனுதாரர்கள் அனைவரும் பதில் அளித்ததற்கு பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாய் இதே விவகாரம் தொடர்பாக நிறைய பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எனவே இது ஒரு முக்கியமான வழக்காக இருக்கும். பொதுவாக இத்தகைய மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறார்கள் என்ற விஷயத்தில் இது முக்கியமான வழக்காக இருக்கிறது.