எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பல மாநிலங்களில் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றலாமா என்பது குறித்து மறு ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழு தனது பரிந்துரைகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதில் எரிவாயு விலை குறையும் வகையில் குழு பரிந்துரை செய்தாலும் அதனை உடனடியாக எந்த மாற்றமும் செய்ய முடியாது. அக்டோபர் மாதம் முதல் எரிவாயு விலை நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை . எனவே குழுவின் பரிந்துரை சாதகமாக இருந்தால் உடனடியாக அமலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது.