தீபாவளி சிறப்பு பண்டிகையை முன்னிட்டு பல அதிரடி சலுகைகளை லேப்டாப்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாத இறுதியிலும் ஓரிரு தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும்,
தற்போது உள்ள சூழ்நிலையில், அலுவலக பணியாக இருந்தாலும் சரி, பள்ளி, கல்லூரி படிப்பு சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்தபடி தான் நடைபெற்று வருகிறது. இதுதான் பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு மடிக்கணினியின் தேவையும் அதிகமாக இருப்பதால், அதனை வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். மடிக்கணினியின் விலை அதிகமாக இருக்கிறதே என்ற கவலையுடன் நல்ல தரமான மடிக்கணினியை வாங்குவதற்காக பணத்தை சேமித்து வருகின்றனர். அவர்களுக்கான நற்செய்தி தான் இது.
பிளிப்கார்ட் நிறுவனம் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 29 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லேப்டாப்களுக்கான சிறந்த ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, லெனோவோ Ideapad s340 லேப்டாப் ரூ39,390க்கும். Asus vivobook14 லேப்டாப் ரூபாய் 35 ஆயிரத்து 990க்கும் , Acer Aspire 7 லேப்டாப் 54 ஆயிரத்து 990க்கும் lenovo ideapad ரூபாய் 47,500 க்கும், Slim 3i லேப்டாப் ரூ47,500க்கும், Dell Vostro 3401 லேப்டாப் ரூபாய் 34 ஆயிரத்து 690க்கும், HP 15s லேப்டாப் ரூ37 ஆயிரத்து 990 கிடைக்கிறது. மக்கள் பிற ஆன்லைன் தளங்களில் உள்ள விலை பட்டியலையும், இதனையும் ஒப்பிட்டு சரியான ஆஃபர் விலையில் இருப்பதாக உணர்ந்தால் வாங்கி பயன் பெறுங்கள்.