Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் கிடைக்கும்”…. நூதன முறையில் லாரி உரிமையாளர்களிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் டீசல் கிடைக்கும் என்று ஆசையில் 6 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர்கள் டீசல் வழங்காமல் ஏமாற்றி சென்றனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |