Categories
Tech டெக்னாலஜி

குறைந்த விலையில்…. அட்டகாசமான ஸ்மார்ட்போன்…. அறிமுகப்படுத்திய ரியல்மீ….!!

பிரபல நிறுவனமான ரியல்மீ புதிய மாடலான C31 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் என 2 வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலின் செல்பி கேமரா 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது.

மேலும் சிறப்பு அம்சமாக  மைக்ரோ-யுஎஸ்பி 10-வாட்ஸ் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி  போன்றவை இதில் அடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. அதாவது 8,999 மற்றும் 9,999 ரூபாய் கொடுத்தாலே இந்த மொபைலை வாங்கலாம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |