Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலைக்கு ஐபோன்”…. ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர்…. போலீசார் அதிரடி…!!!!!

ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் 22,000-க்கு தருமாறு பேரம் பேசி இருக்கின்றார். முதலில் மருத்த அந்த மர்ம நபர் பின் ஒப்புக்கொண்ட நிலையில் வங்கி கணக்கில் 22,000 கூகுள் பே மூலம் செலுத்தி இருக்கின்றார்.

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் ஐபோனை கொரியரில் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். ஆனால் ஐபோன் வராததால் சந்தேகம் அடைந்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் வங்கி கணக்கு மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இந்த மோசடி நடந்தது தெரிய வந்தது. இதை எடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது நான்கு பேர் செல்போனில் பேரம் பேசியபடி மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் ரமேஷ் ,முகமது ஹரிஷ், முகமது தவ்பிக், சுதர்சன் என்பதும் நான்கு பேரும் வேலை தேடி வந்ததாகவும் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்கள். இவ்வாறு தொழில் செய்து கொண்டிருந்தபோது முகநூலில் தங்களை சிலர் ஏமாற்றி மோசடி செய்தார்கள். அதனால் வாழ்க்கையில் வெறுத்து போக உண்மையாக இருக்கும் நம்மிடம் இந்த சமுதாயம் ஏமாற்றுகின்றது.

அதனால் நாம் மட்டும் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என குறைந்த விலைக்கு செல்போன் விற்பனை எனக் கூறி சிலரிடம் மோசடி செய்தபோது பெரிய பாதிப்பு ஏதும் வரவில்லை. ஆகையால் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்கள். இதுவரை 24 பேர் வரை மோசடி செய்ததாக பரபரப்பு தகவலை கூறியுள்ளார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |