பொது தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு அபினா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பொது தேர்வில் 397 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
ஆனாலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த அபினா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அபினாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.