Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குறைந்த கடல் நீர் மட்டம்” குவிந்து வந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட படகு போக்குவரத்து….!!!!

நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை  பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண்பதற்கு உள்நாடு மட்டும் இன்றி  வெளிநாட்டில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்றும் காலையில் கடல் உள்வாங்கி அடியில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்துள்ளது. இந்நிலையில்  காலை 10 மணி அளவில் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்துள்ளனர்.

Categories

Tech |