Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறைதீர் கூட்டத்தில்… “மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர்” வழங்கிய கலெக்டர்…!!!

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பொருந்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சரவணன், மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கீழ்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களுக்கு மூன்று சக்கரம் பொருந்திய மோட்டார் சைக்கிளையும் கலெக்டர் வழங்கியுள்ளார்.

Categories

Tech |