குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. மேலும் ஒரு இணையதள லிங்கையும் அனுப்பி இருக்கின்றனர்.
அதை நம்பி ஹேமப்பிரியாவும் சிறிதளவு பணத்தை முதலீடு செய்ததற்கு அவருக்கு லாபத்துடன் பணம் கிடைத்திருக்கின்றது. இதனால் அவர் தொடர்ந்து முதலீடு செய்ய மொத்தமாக அவர் 4 லட்சத்து 37 ஆயிரத்து 879 ரூபாய் முதலீடு செய்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பாக அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் ஹேமப்பிரியாவால் அந்த பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.