நாய் குறுக்கே பாய்ந்ததால் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை புறவழிச்சாலையில் திருச்சியிலிருந்து தொண்டி நோக்கி மினி லாரி ஒன்று காய்கறி ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது திடீரென நாய் ஒன்று மினி லாரியின் குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க மினி லாரியின் ஓட்டுனர் வேகத்தை குறைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இதில் காய்கறி அனைத்தும் சிதறி போய்விட்டது. அந்த லாரி ஓட்டுனர் மற்றும் சாலையில் சென்ற யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு பணியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி லாரியை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.