Categories
மாநில செய்திகள்

குரூப் 5A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inஎன்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த எழுத்து தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |