Categories
மாநில செய்திகள்

குரூப் 3 தேர்வு….232 காலி பணியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211, பொது சுகாதாரத் துறையில் கணக்கிட்டாளர்கள் ஐந்து, புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர்கள் 1 என மொத்தம் 217 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதற்கான தீர்வு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 60 வயது நிரம்பியிருக்கக் கூடாது. மற்ற பிரிவினருக்கு 32 வயது உச்சவரம்பு. இந்த பணியில் சேர்வதற்கு புள்ளியில்,கணிதம் மற்றும் உயிரி புள்ளியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கூட்டுறவுத் துறையில் குரூப் 3 பதவியில் இளநிலை ஆய்வாளர் 14, தொழில் மற்றும் வணிகத்துறை, கிடங்கு காப்பாளர் பதவியில் ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும்.

இளநிலை ஆய்வாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் கிடங்கு காப்பாளர் பதவிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். மேலும் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 37, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கு 34, இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு 32 வயது வரம்பு.அக்டோபர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |