தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடந்து முடிந்தது . இதில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 5413 நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கு மே 21ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 4021 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.
முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம், அதன் பிறகு டிசம்பர் மாதம், ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-2 தேர்வுக்கான தற்காலிக விடைகள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வுக்கான தற்காலிக விடைகளை காண தற்போது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c