தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை இல்லாமல் இருந்தது. தற்போது குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.