தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உதவி மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதி இருந்தனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுதினார். இந்த தேர்வில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் லாவண்யா என்ற பெண் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகள் ஆவார். இந்நிலையில் லாவண்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், குரூப் 2 தேர்வில் ஏற்கனவே 3 முறை தேர்ச்சி, கடந்த குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு தி.மு.க காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் லாவண்யா நான் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய பெற்றோருக்கும் கணவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.