தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் குரூப்-1 குரூப்-2 ஏ போன்ற தேர்வுகளில் இடம்பெறும் தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத் திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்து . தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள், பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.