Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

குருவிக்கு கூட இங்கே வீடு இருக்கு.. வாழும் மனிதருக்கு வீடு எங்கே.? பரிதவிக்கும் சாலையோர வாசிகள்..!!

சுய ஊரடங்கு உத்தரவு, வீடுகள் இல்லாத சாலையோர வாசிகள், உணவின்றி தவிக்கும் பரிதாபம்..!

மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் பொழுது, சாலையோர வாசிகளின் நிலை என்ன வீடு இல்லாதோர் எங்கே தங்குவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சென்னைமாநகராட்சி நிறுவனம் நிர்வாகம் 60 இடங்களில் வீடற்றோர் தங்குமிடங்களில் இருப்பதாகவும் அங்கே வீடு இல்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது.

ஆனால் ஒரு சில பகுதிகளில் முகாமிற்கு அழைத்துச் செல்ல படாமல் பலரும் சாலையோரம் வசித்தனர். ஓட்டல்கள், சிற்றுண்டி சாலைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டதால், பலர் சாலை ஓரம் சமையல் செய்து சாப்பிட்டனர். கிடைக்கும் கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் சாலையோர வாசிகள், குடும்பம் குடும்பமாக தாயகட்டை, கல்லாங்காய் போன்ற மரபு விளையாட்டுக்களை விளையாடி பொழுதை கழித்தனர்.

சின்னஞ்சிறு குருவிக்கு கூட இங்கே கூடு உண்டு, ஆனால் வாழும் மனிதர்களுக்கு இங்கு வீடு இல்லை. வீடற்றோர் இல்லங்களில் தங்க வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற வாயிலுக்கு எதிரிலேயே சாலை ஓரம் இவர்கள் உணவின்றி தவிர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், உணவின்றி தவித்த தம்பதியினரை மீட்டனர். என்ன செய்வோர் சாலை,  பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்கு வழியின்றி தவித்த சாலையோர வாசிகளும் மீட்கப்பட்டு வீடற்றோர் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் உணவின்றி சாலை ஓரம் வசிப்பவர்களை கண்டால் 1933 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |