குருகிராமில் இந்த பஸ் இத்தனை மணிக்கு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடையும் என்ற தகவலை பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் அறிமுகமாக இருக்கிறது .
ஹரியானா மாநிலம் குருகிராமில் பேருந்துகள் நிறுத்தத்தில் இந்த வசதி உருவாக்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்தில் 100 சிறிய பேருந்துகளின் நேரங்கள் இந்த ஒளிரும் எண்ம பலகையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மூல்சந்த் ஷர்மா அறிவித்தார். மேலும் விரைவில் இது மெட்ரோ பகுதியில் இருந்து குருகிராமுக்கு வரும் பேருந்துகளின் சேவைக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக எண்ம பலகைகள் விரைவில் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.