கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று 98 நாடுகளில் பரவி 45,000 மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 197 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் ஈரான் இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசும்போது குரங்கம்மை பாதிப்பு சர்வதேச அளவில் 21 சதவீதம் குறைந்திருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
Categories
“குரங்கம்மை சர்வதேச அளவில் 21 சதவிகிதம் குறைவு”… சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து…!!!!!!
