Categories
உலக செய்திகள்

குரங்கம்மையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி….? தகவல் வெளியிட்ட கனடா பொது சுகாதார அதிகாரி….!!

கனடா முழுவதும் 681 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கனடா நாட்டில் 681 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வெளியாட்கள் வந்து சென்ற பிறகு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். முககவசம் அணிய வேண்டும். குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |