Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கும்முடிபூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்”…. தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு….!!!!!

கும்பிடிபூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி அடுத்திருக்கும் கோட்டக்கரையில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

இவர் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்ததை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |