Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான வீரமணி என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கம்மாளப்பட்டியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே இருக்கும் குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும்(9) வீரமணியின் மகன் சர்வனும்(6) பார்த்ததால் அவர்களுக்கும் நண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

இதனால் இரண்டு நண்பர்களும் குட்டை பகுதிக்கு சென்று நண்டு பிடிக்கு முயன்ற போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையில் மகன்களை காணாமல் தங்கமணியும், வீரமணியும் தேடி அலைந்தனர். அப்போது குட்டை காருகே சிறுவர்களின் காலணிகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்களது மகன்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |