Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்….! அலட்சியம் வேண்டாம்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மனதில் உறுதி தன்மை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

இன்று முக்கிய பணி நிறைவேறுவதில் கொஞ்சம் காலதாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடு அவசியம். அலட்சியம் காட்ட வேண்டாம். செலவை கட்டுப்படுத்த வேண்டும். வேலையை சட்டென்று முடிக்கப் பாருங்கள். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமானவர்களின் சந்திப்பால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதிக்க முடியும். மனதில் உறுதி தன்மை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை எப்பொழுதும் போல வைத்து கொள்ள வேண்டும். கடன்பிரச்சினையை பதில் சொல்லும்போது கவனம் வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடன் பணத்தை வசூல் செய்யும்போது கவனம் இருக்கட்டும். அவசரம் எதுவும் காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது எப்பொழுதும் போலவே நல்லது.

எதிர்பாராத சில திருப்பங்கள் இருக்கின்றது. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திடீரென்று வரக்கூடிய செலவுகளை திட்டமிட வேண்டும். காதல் ஓரளவுதான் கைகூடும். சில பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. காதலில் திட்டமிட்டு தான் எதையும் செய்ய வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம். கல்வி மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |