Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ள அபாய அளவை கடந்த அணையின் நீர்மட்டம்…. தீவிர கண்காணிப்பு…!!

பேச்சிப்பாறை அணைப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்ததால் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை கடந்து இருப்பதால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |