Categories
தேசிய செய்திகள்

“குப்பையிலிருந்து மின்சாரம்” இந்த கிராமம் நாட்டிற்கே முன்னுதாரணம்…. பிரதமர் மோடி பாராட்டு…!!!

ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். அந்த வகையில் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்திலுள்ள மக்கள் குப்பையில் இருந்து மின்சாரத்தை தயாரித்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதனால் அந்த கிராம மக்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த கிராமம் நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் கூறியுள்ளார். காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை  ஊராட்சிக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை ரீசார்ஜ் செய்வது, தெரு விளக்குகளுக்கு பயன்படுவது, அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |