குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தையின் சடலம் வெள்ளிக்கிழமை அன்று மாலை கிடைத்துள்ளதாகவும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையின் தாய் மருத்துவமனையிலிருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்குழந்தைக்கு செய்யப்பட்ட உடற்கூறுஆய்வில் இது இயற்கையாக நிகழ்ந்த மரணம் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் குழந்தையின் மரணம் குறித்து தெளிவான காரணம் தெரியவில்லை என்றும் இந்த வழக்கு தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.