சொத்து வரி போல எதிர்காலத்தில் குப்பைக்கும் வரி வசூல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது!
அதன்படி வீடுகளில் பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது . வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிற்கு குப்பை வரி விதிக்கப்படும் என தெரிகிறது. எதிர் காலத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து கொட்டாத அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.