கரும்பு தோட்டத்திம் முதல் பால்பண்ணை வரை தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஓட்டுபட்டி பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்புக்குடிபட்டியில் கரும்பு தோட்டம் ஒன்று வைத்துள்ளார். அதே தோட்டத்தை ஒட்டி கரும்பாலை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டதால் கரும்பு ஆலையின் மேற்கூரையில் நெருப்புப் பற்றி எரிந்தது. அந்த நெருப்பு அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரை, கரும்புச்சக்கை உபகரண பொருட்கள் மற்றும் மூன்று தென்னை மரங்களை முழுவதுமாக எரித்து நாசப்படுத்தியது.
இதனையடுத்து அந்த கருப்பாலையை ஒட்டி அதே ஊரில் வசித்து வரும் கனகம் என்பவர் நடத்தி வரும் பால்பண்ணையில் அந்த நெருப்பு பரவியது. இதனால் பண்ணையின் மேற்கூரை மற்றும் பால்கேன் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நெருப்பை அணைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.