கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்திற்கு கராச்சிக்கு மாகாணத்தில் உள்ள பஞ்ச்குர் என்ற இடத்திலிருந்து பேருந்து ஒன்று சென்று உள்ளது. இந்த பேருந்தானது குவெட்டா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், 5 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் உதால் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து உள்ளூர் போலீசார் கூறும்போது அதிகமான பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.