நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் ஏற்படுத்தியது.ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணை குழு பல்வேறு தரவுகளை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணை குழு அறிக்கையின் முதல் கட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலை மட்டுமே காரணம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்கள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.