குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழமாந்தை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கும் ஆரோக்கியஸ்ரீதேவி என்பவருக்கும் சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நடந்த இரண்டு மாதத்திலேயே ஆரோக்கியஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து தந்தையை வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொழுது ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்திருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியஸ்ரீதேவின் சகோதரர் சென்ற ஏழாம் தேதி கடையிலிருந்த அல்பர்ட்டை அறிவாளால் தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைதித்தார்கள். மேலும் இது பற்றி ஆல்பர்டின் அண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனால் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சகோதரர் ஆரோக்கியஸ்ரீதரை கைது செய்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆல்பர்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆல்பர்ட்டின் உறவினர்கள் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கடைவீதி சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு மறியல் கைவிடப்பட்டது.