சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளி வெங்கட், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
#VambulaThumbula video song from #SarpattaParambarai 😍 @Music_Santhosh sir 🔥🔥🔥https://t.co/SXtje8JYRV@PrimeVideoIN @beemji @KalaiActor @Actorsanthosh @johnkokken1 @shabzkal @officialdushara pic.twitter.com/9lKK7F1IsU
— Arya (@arya_offl) July 21, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வடசென்னையில் 1980-களில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற ‘வம்புல தும்புல’ என்கிற குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாகிறது .