Categories
மாநில செய்திகள்

குண்டூசியை விழுங்கிய சிறுவன்…‌ கவலையில் பெற்றோர்கள்… ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஓசூர் அருகே பள்ளி மாணவன் குண்டூசியை  விழுங்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள  மோரணப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகன் எல்லேஷ்(12). இவர் மோரணபள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இன்று வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டூசி ஒன்றை வாயில் போட்டு கடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராத விதமாக குண்டூசியை விழுங்கியுள்ளான். இதனால்  அச்சமடைந்த மாணவன் எல்லேஷ் இது பற்றி பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து பதறிப்போன பள்ளி ஆசிரியர் உடனடியாக அவனை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத சூழலில் மாணவனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குண்டூசி வயிற்றின் உட்புறத்தில் இருக்கும் காட்சியை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர். மேலும் வயிற்றில் இருந்த குண்டூசியை வெளியே எடுத்து மாணவனை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

Categories

Tech |