Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள்…. ரோட்டில் தேங்கி கிடக்கும் நீரில் தவம் செய்த இளைஞர்…. பரபரப்பு….!!!!

கேரளா மலப்புரத்தில் வசித்து வருபவர் ஹம்சாஎன்ற இளைஞர். அப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சாலை மோசமாக உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை அதிகாரிகளின் கவனத்திற்கு ஹம்சா கொண்டு செல்ல விரும்பினார். இதனால் குளித்துவிட்டு துணிதுவைக்க சாலையிலுள்ள பள்ளத்தில் நின்றுகொண்டு அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவமானது மலப்புரம் பண்டிக்காடு சாலையில் அரேங்கேறியுள்ளது. கேரளாவிலுள்ள அனைத்து சாலைகளின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது என்று இளைஞர் கூறுகிறார். அதாவது பாண்டிக்குட் முதல் பாலக்காடு வரை அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்னதாக சாலைகள் அனைத்திலும் தார்போடப்பட்டது. எனினும் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று இளைஞர் யோசித்தபோது, ​​தேங்கிகிடந்த தண்ணீரில் இறங்கி குளிக்க முடிவு செய்தார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற எம்எல்ஏ யு.ஏ.லத்தீப், அந்த இளைஞர் தவம்செய்து கொண்டிருந்ததையும், சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளித்து, துணி துவைப்பதையும் பார்த்தார். இப்பகுதியில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வளவு நடந்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே அனைத்து சாலைகளும் குட்டைகளாக மாறிவருகிறது என்று இளைஞர் ஹம்சா கூறினார்.

Categories

Tech |