கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் வேளாண் தெருவில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் இருந்தார் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவின் போது ஆறுமுகத்துக்கும், அப்பகுதியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் பாலமுருகன் உட்பட 6 நபருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பால முருகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கியதில் படுகாயமடைந்த அவர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இதற்கு காரணமான அந்த 7 நபரை காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் பால முருகன், விஜய்,கருப்பையா ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டரிடம் காவல் துறையினர் பரிந்துரை செய்தார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் அடிப்பையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையின் நகலை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.