Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! இந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி…. மத்திய அரசு சூப்பர் நியூஸ்…!!!

இந்தியாவில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு மே மாதம் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ரன் என்ற திட்டத்தை, இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்காக மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ளது.  இதுபோன்ற பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சுகாதார ரீதியாகவும் மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி குழந்தையின் 18 வயது வரை ஒவ்வொரு மாதமும் நிதியுதவி வழங்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவி குழந்தைக்கு 23 வயது ஆகும் போது கிடைக்கும்.மேலும்  குழந்தையின் 18 வயது வரை ரூ.5 லட்சம் காப்பீடு உதவியானது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் இந்த  குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட்டு மற்றும் அதற்கான செலவையும் அரசே ஏற்கிறது.

இதன் மூலம் 11 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆதரவற்ற குழந்தைகள், நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் அரசு தரப்பில் சேர்த்துவிடுகிறார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டும் அமலில் இருந்த நிலையில், இத்திட்டத்தை வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |