Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்… 15 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச் ,பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்கச் சொல்லி தெளிவு படுத்தினார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும் போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார்.

அதேபோன்று பல சிறுமிகளும் அதே மளிகை கடைக்காரர் தங்களையும் அவ்வாறு பல இடங்களில் தொட்டு தடவி பேசியதாக தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டரில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் நடராஜனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |