ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்கூற சோர்வாக இருப்பதால் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேற உள்ளதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டிருந்தார். கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து வந்தார். அவரின் அன்பை ரசிகர்கள் கேலி செய்து வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டைவிட்டு அர்ச்சனா வெளியேறிய பின்னரும் அன்பு அணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் ,இதற்கு முழு காரணம் அர்ச்சனா தான் எனவும் விமர்சனங்கள் வந்துள்ளது.
மேலும் போட்டியாளர்கள் தனித்தன்மையுடன் விளையாடுவதை கெடுத்தது அர்ச்சனா தான் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது . அர்ச்சனா வெளியேறி ஒரு வாரம் ஆன நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுத்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் இருந்து தான் வெளியேறுவதாக அதிரடியாக அர்ச்சனா அறிவித்துள்ளார் . அதில் ‘உங்கள் அன்பினால் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் . என் வெறுப்பாளர்களின் கேள்விக்கு பதில் கூற சோர்வாக உள்ளது . அதனால் ட்விட்டரிலிருந்து விலகப்போகிறேன் . என் வெறுப்பாளர்கள் இதனைக் கொண்டாட தயாராகுங்கள் . ஆனால் நான் மீண்டும் இதை விட வலுவாக முன்னேறுவேன். நீங்கள் இனி கிண்டல் ,கேலி செய்வதற்கு அடுத்த நபரை கண்டுபிடியுங்கள். குட்பை ட்விட்டர் ‘ என பதிவிட்டுள்ளார்